சென்னை: நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நாளை மறுநாள் நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது, “இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு மனுவை சீமான் தள்ளுபடி செய்தார். இதையடுத்து போலீசார் மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர். முதற்கட்டமாக, 27-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் நேற்று சம்மன் அனுப்பினர்.