சென்னை : நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோரை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பி.கேவிடம் எதிர்கால அரசியல், 2026 தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டத்திலும் பிரசாந்த் கிஷோர் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.