சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம், விஜய் தற்போது கட்சி தொடங்கிவிட்ட நிலையில் அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது விஜய் கட்சி தொடங்கி முதலாம் ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி அதன் தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கப்பட்டு முடிந்துள்ளது.
2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்தி உள்ளார். இந்நிலையில், பா.ஜ.க. வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.