இஸ்லாமாபாத்: சுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்திய போது பாகிஸ்தான் வீரர் செய்த செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில், சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்திய போது பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது செய்த செயல் தேவையில்லாதது.
கொண்டாடுவதற்கென்று ஒரு நேரம், இடம் உள்ளது. நீங்கள் ஜெயித்திருந்தால் சரி. நீங்களே பின்தங்கி உள்ளீர்கள்.
அப்போது அமைதியாக தான் இருக்க வேண்டும்” என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.