துபாய் : சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் இணைந்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி துபாய் சென்றுள்ளது. அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் அணியுடன் சென்ற நிலையில், சில காரணங்களால் அவசரமாக நாடு திரும்பினார்.
இதனால் இந்திய அணி 2 போட்டிகள் பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாமல் விளையாடியது.
இந்நிலையில் தற்போது மோர்னே மோர்கல் துபாய்க்கு திரும்பினார். அவர் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்துள்ளார்.