இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கு பாபர் அசாம் காரணம் என்று முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சிறந்த வீரர்களுக்கு பதிலாக தனது நண்பர்களை பாபர் அசாம் PAK அணியில் சேர்த்ததாக அணியின் முன்னாள் வீரர் அகமத் ஷேசாத் விமர்சித்துள்ளார்.
அசாமை மோசமான ஃபார்மில் பார்க்க வேதனையாக இருப்பதாகவும், சிறந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிற போது இப்படி படுதோல்விகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் இடையூறுகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.