சென்னை: இந்தி அல்ல, லத்தின் கூட கற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
பிரதமரே.. இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள், இருமொழியே எங்களுக்கு போதும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தேவையெனில் இந்தி அல்ல, லத்தின் மொழியை கூட அறிவியல் தொழில்நுட்பம் மூலம் கற்றுக்கொள்வோம் என்று கூறிய அவர், மும்மொழிக் கல்வியை அனைவரும் ஏற்க வேண்டுமென எந்தச் சட்டத்தில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், பெயர் தான் தர்மேந்திர பிரதான்.. ஆனால், உங்களிடம் தர்மமே இல்லையே என்றும் சாடினார். தமிழகம் முழுவதும் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.