புதுடில்லி: மெகுல் சோக்சிக்கு ரத்த புற்றுநோய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
PNB வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வழக்கில் தேடப்படும் தொழிலதிபர் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் தலைமறைவாக உள்ளார். விசாரணைக்கு ஆஜராகும்படி, அவரை மும்பை விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், இதற்கு ரேடியேஷன் தெரபி சிகிச்சை எடுப்பதால் இந்தியா வர முடியாது. ஆகஸ்ட் வரை தன்னால் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். இதுகுறித்து நீதிமன்றம் என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.