புதுடில்லி: மகளிர் பிரீமியர் லீக் டி 20ல் டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் T20 தொடரில், மும்பையை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. பெங்களூருவில் முதலில் விளையாடிய MIW அணி, 20 ஓவர்களில் 123/9 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய DCW வீராங்கனைகள், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 14.3 ஓவர்களில் 124/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக மெக் லேனிங் 60, ஷஃபாலி வெர்மா 43 ரன்கள் எடுத்தனர். மும்பை தரப்பில் அமன்ஜோத், ஒரு விக்கெட் வீழ்த்தினார்.