சென்னை : கமல் பட தோல்வியால் ரஜினி படம் டிராப் ஆனது. இருப்பினும் இன்று முதல் ரஜினி என்னிடம் அன்புடன் பழகிதான் வருகிறார் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
‘உத்தமவில்லன்’ பட ரிலீஸ் நேரத்தில், தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ரஜினியின் புதிய படத்தைத் தயாரிக்க இருந்ததாக லிங்குசாமி தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்ததாகவும், ஆனால் ‘உத்தமவில்லன்’ படத்தின் தோல்வியால் இப்படம் டிராப் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், ரஜினி அதே அன்போடு இன்று வரை தன்னிடம் பழகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.