சென்னை : புதிய வெர்ஷனில் நடிகர் விஜய் நடித்த ‘சச்சின்’ பட பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் ‘சச்சின்’ படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில், விஜய், ஜெனிலியா நடிப்பில் கடந்த 2005ல் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, கோடை விடுமுறையில் இப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்மூடி திறக்கும்போது’ பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய வெர்ஷனில் வெளியாகியுள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.