இஸ்தான்புல் : குர்தீஷ் பயங்கரவாதிகள் ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததால், துருக்கியில் 40 ஆண்டு கால வன்முறை முடிவுக்கு வருகிறது. மேற்கு ஆசிய நாடான துருக்கியின் அதிபராக ரிகெப் டய்யீப் எர்டோகன் பதவி வகிக்கிறார்.
இங்கு குர்தீஷ் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே., என கூறிக் கொள்ளும் குர்தீஷ் பயங்கரவாதிகள், 1984ல் இருந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.இதன் தலைவர் அப்துல்லா ஒக்லான், 1999ல் இருந்து சிறையில் இருக்கிறார். எனினும் குர்தீஷ் பயங்கரவாதிகள், வன்முறையை தொடருகின்றனர்.
அமைதி ஒப்பந்தங்கள் பயனற்றுப் போன நிலையில், சிறையில் இருக்கும் அப்துல்லாவை சமீபத்தில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடும்படி கோரினர்.
இந்த நிலையில், ஆயுதங்களை கைவிடுவதாக குர்தீஷ் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.