நோன்பு எடுப்பவர்களுக்கு வீட்டு உபயோகத்தில் எளிதாக செய்யக்கூடிய கறிவத்தல் ஒரு சிறந்த தேர்வாகும். சிக்கன், மட்டன், பீஃப் என எந்த வகையான கறியையும் இதை செய்யலாம்.
மட்டன் கறிவத்தல் செய்ய தேவையான பொருட்கள்: போன்லெஸ் சிக்கன், மட்டன் அல்லது பீஃப், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை: முதலில், எந்த வகை கறி வைத்து கறிவத்தல் செய்யப் போகிறோமோ, அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். எலும்பு இல்லாத மட்டனை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், குக்கரில் அந்த கறியை சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக குக்கரில் விசில் விட வேண்டும்.
பிறகு, அந்த கறியை மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்து, வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை மற்றும் மிளகாய் செதில்கள் சேர்த்து, எண்ணெய் ஊற்றி கடாயில் வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு கரம் மசாலா சேர்த்தால், சுவையான “மட்டன் கறி வத்தல்” தயார்.
இந்த கறி வத்தலை நோன்பு எடுப்பவர்கள் செய்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இது ரச சாதம் அல்லது சாம்பார் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.