சென்னை: தென் கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு மின்னணு சாதனங்களை விற்பனை செய்கிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சாம்சங் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்ஸி சீரிஸ் போன்கள் உலகம் முழுவதும் பிரபலம். அந்த வகையில் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போன் தற்போது கேலக்ஸி ‘ஏ’ வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போனுடன் கேலக்ஸி ஏ36 மற்றும் ஏ26 போன்களையும் சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை AI அம்சங்களையும் கொண்டுள்ளது.
Galaxy A56 – சிறப்பு அம்சங்கள்
6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
Exynos 1580 சிப்செட்
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
பின்புறத்தில் 50 + 12 + 5 மெகாபிக்சல் கேமரா
12 மெகாபிக்சல் முன் கேமரா
5,000mAh பேட்டரி
45 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு
5G நெட்வொர்க் 8ஜிபி/12ஜிபி ரேம்
128ஜிபி/256ஜிபி சேமிப்பு
இந்த போனின் விலை ரூ. 41,999 இந்த போன் விற்பனையில் OnePlus 13, iQOO Neo 9 Pro, Vivo V50 போன்ற போன்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.