சென்னை : இசைஞானி இளையராஜாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் புதிய பெயர் ஒன்றை வைத்துள்ளார். என்ன தெரியுங்களா?
இசைஞானி இளையராஜாவை பார்ப்பது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இளையராஜாவிடம் இருப்பது தான் என்ற அகந்தை அல்ல, அது தன்னை உணர்ந்த மெய்ஞானத்தின் வெளிப்பாடு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவரை இசைஞானி என்பதை விட மெய்ஞானி என அழைப்பதே பொருந்தும். அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பது வியப்பை தருவதாகவும் திருமா கூறியுள்ளார்.
இசை என்னிலிருந்து வேறு அல்ல என்று கூறும்போது, அவரது கண்களில் ஞானஒளியை உணரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார். திருமாவளவனின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.