சென்னை : புழல் சிறையில் ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். எதற்காக தெரியுங்களா?
சென்னை புழல் சிறையில் ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் சோதனை நடத்தினர். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய குழு சுமார் 3 மணி நேரம் வரை ஆய்வு மேற்கொண்டது.
தனிமைச் சிறை, உயர் பாதுகாப்பு அறை, பெண்கள் சிறை ஆகியவற்றை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அப்போது சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்தும் கைதிகளிடம் கேட்டறிந்தனர்.
முதலில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை செய்திகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு மேற்கொள்ள நீதிபதிகள் இந்த திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.