சென்னை: மெட்ரோ ரயில்கள் சென்னையில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. தூரம் 54 கி.மீ. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னையில் மெட்ரோ ரயில்களில் பேப்பர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய வாட்ஸ் அப் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய கவுன்டர்களில் காத்திருக்காமல், மொபைல் போனில் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை 8.30 மணியளவில் வாட்ஸ் அப் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மற்ற ஆன்லைன் தளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியது. இதையடுத்து Paytm, சிங்கார சென்னை கார்டு மற்றும் டிக்கெட் கவுன்டர்களில் எந்தவித பாதிப்பும் இன்றி டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்ய முடிந்தது. இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.