புதுடெல்லி: நடிகை ரன்யா ராவ் மீதான வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் விசாரித்து, சிபிஐக்கு மாற்றியுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரை சேர்ந்த 34 வயதான ரன்யா ராவ், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். கர்நாடகா போலீஸ் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (HIDDC) ஏடிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் இவர். கடந்த 3 ஆம் தேதி, துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.80 கிலோ தங்கக் கட்டிகளை கடத்திச் சென்று கொண்டிருந்தார்.

விமான நிலையத்தில் தனது தொடையில் பொருத்தி தங்கக் கட்டிகளை கடத்திய பின்னர் டெல்லி வருவாய் புலனாய்வுப் பிரிவு (RIB) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். மொத்தம் ரூ.17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரன்யா ராவ் தேச விரோத சக்திகளுடன் தொடர்பு வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இப்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மும்பை மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் சிபிஐ அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.