சென்னை: அதிமுக அல்ல, பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடக்கின்றன என்று அண்ணாமலை கூறியதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பாரதிய ஜனதாவிடம் தோற்றுவிட்டதாக கூறியவர்கள், பாஜக கூட்டணிக்காக தவம் இருந்ததாக அண்ணாமலை விமர்சித்திருந்தார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி மகளிரணி நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- அண்ணாமலை பேசியது குறித்து அதிமுக மீது அவதூறு பரப்ப வேண்டாம். அதிமுக கூட்டணிக்காக எப்போதும் தவம் இருந்ததில்லை.

அதிமுக கூட்டணிக்காக தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியதாக பொய்யான தகவலை பரப்ப வேண்டாம். அதிமுகவை குறிப்பிட்டு அண்ணாமலை பேசினாரா? “தவறான விஷயத்தைச் சொல்லாதே..” கூட்டணி பற்றி தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன் பதில் சொல்வேன் என்றார்.