சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் அளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அவர் திமுக இணையதளவாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலினின் வாரிசு அரசியலை விமர்சித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன், ஸ்டாலின் தன்னை “அப்பா” என அழைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியபோது, அதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்கவில்லை. அவர் கூறியதாவது, “இந்த ஆட்சியே அப்பப்பா ஆட்சியாக சென்று கொண்டிருக்கிறது” என கிண்டலடித்தார். மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் குற்றச்சாட்டுகளை எழுப்பி, “இந்திக்காக போராடுகிறீர்கள் என்று கூறும் இவர்கள், தமிழுக்கு எதிராக செயல்படுகிறார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழிசை, 3வது மொழி கற்றுக் கொள்வதற்கான அவசியம் குறித்து பேசினார். “வயதான பிறகு தெலுங்கு கற்றுக் கொள்வது கஷ்டம், ஆனால் நம் குழந்தைகள் எளிதில் பல மொழிகளை கற்றுக் கொள்ள முடியும்” என கூறினார். இதன் பின்னர், தமிழிசை மேலும் கூறியதாவது, “தமிழுக்கு பிரச்சனையென்றால் பாஜக தொண்டனால் மட்டுமே உயிர் கொடுக்க முடியும்” என தெரிவித்தார்.
அதன் பின்னர், திமுகவின் உறுப்பினர்களை திட்டி, “நாங்கள் ஆங்கிலத்திற்கு வென்சாமரம் வீசிக் கொண்டிருக்கமாட்டோம்” என்று தமிழிசை சவுந்தரராஜன் திமுகவுக்கு பதிலடி கொடுத்தார்.