டொமினிகன் குடியரசுக்கு சுற்றுலா சென்ற போது காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷா கோனாங்கியை தேடி அதிகாரிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். 20 வயதான சுதிக்ஷா கோனாங்கி, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் படித்து வந்தார். அவர் தனது நண்பர்களுடன் டொமினிகன் குடியரசில் சுற்றுலாவிற்குச் சென்றார். புன்டா கானாவில் உள்ள ரியு ரெப்யூப்ளிகா ஹோட்டலில் கடற்கரைக்கு சென்ற சுதிக்ஷா பிகினி உடையில் கடற்கரையில் நடந்து செல்லும் போது மர்மமான முறையில் காணாமல் போயினா்.
இதையடுத்து, டொமினிகன் குடியரசின் அதிகாரிகள் சுதிக்ஷா கோனாங்கியை கண்டுபிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். கடல் பகுதியில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கோனாங்கியுடன் சென்ற மாணவிகள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரித்து, அவர்கள் கூறிய தகவலின்படி தேடுதலின் படம் விரிவடைந்துள்ளது.
கோனாங்கியின் தந்தை சுப்பராயுடு, இதுகுறித்து கூறுகையில், “இன்றுவரை டொமினிகன் குடியரசில் பல அதிகாரிகள் நீரில் தேடினார்கள். அவர்கள் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தேடுதல் பணி செய்து வருகின்றனர். அருகிலுள்ள புதர்கள், மரங்களிலும் தேடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இடங்களில் பல முறை தேடிய பிறகும், எவ்வித சோதனையும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.
சுப்பராயுடு மேலும், “எனது மகள் மிகவும் நல்லவர். அவள் லட்சியவாதி. அவர் மருத்துவ துறையில் சிறந்து விளங்க விரும்பினார். மார்ச் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்றவர். அவரது தோழிகள் அனைவரும் திரும்பி வந்துவிட்டார்கள், ஆனால் எனது மகள் மட்டும் காணாமல் போய்விட்டார்” என்று கூறினார்.
இதற்கிடையில், அதிகாரிகள் தங்கள் தேடலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர், மேலும் சுதிக்ஷாவைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.