புதுச்சேரி: இதுகுறித்து புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு விடுமுறை நாளான மார்ச் 14-ம் தேதி ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு மூடப்படும். நோயாளிகள் இந்த தேதியில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் அனைத்து அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகளும் வழக்கம் போல் செயல்படும்”.
புதுச்சேரி ஜிப்மர் சிகிச்சைக்காக, புதுச்சேரி மட்டுமின்றி, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதுகுறித்து பல நோயாளிகள் கூறுகையில், “தற்போது புறநோயாளிகள் பிரிவுக்கு ஜிப்மர் அடிக்கடி விடுமுறை அளிப்பதால், வடமாநிலங்களில் நடக்கும் பண்டிகைகளை இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர்.இதனால், இங்குள்ளவர்கள் மட்டுமே அவதிப்படுகின்றனர்.

அனைத்து மத்திய விடுமுறை நாட்களிலும் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என ஜிப்மரில் அடிக்கடி அறிவிப்பு வருவதை தவிர்க்க புதுச்சேரி மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், விடுமுறைக்கு முன்பதிவு செய்த நோயாளிகளின் மொபைல் எண்களையும் ஜிப்மர் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பல கிலோ மீட்டர் பயணம் செய்வதைத் தவிர்க்க முடியும்” என்றார்.