தங்கவயல்: தங்கவயல் நகரில், நகராட்சி நடத்திய அதிரடி சோதனைக்கு பின், செயற்கை வண்ணம் சேர்க்காமல், சிக்கன் கபாப் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களைச் சேர்க்க சமீபத்தில் தடை விதித்துள்ளது. உணவில் உள்ள செயற்கை சாயங்களில் புற்றுநோயை உண்டாக்கும் ‘ரோட்டமைன் பி’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது உடலுக்கு கேடு விளைவிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சிக்கன் உணவுகள், இனிப்பு வகைகள், கோபி மஞ்சூரியன், பானி பூரி போன்ற வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன.
இதையடுத்து, தங்கவயல் நகராட்சி கமிஷனர் பவன்குமார், கடைகளில் சோதனை நடத்தி, அவற்றை பறிமுதல் செய்தார். ரசாயன கலவை பாட்டில்கள், உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கவயலில் 9 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்பிறகு தங்கவயலில் சிக்கன் கபாப் உள்ளிட்ட உணவு வகைகள் செயற்கை நிறம் சேர்க்காமல் விற்பனை செய்யப்படுகிறது.