சென்னை: ரூ.2000 கோடி வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி. குமரி மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்கு ஒதுக்க வேண்டும். கன்னியாகுமரி அழகிய கடற்கரைகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கடலில் கண்ணாடிப் பாலம், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, மாத்தூர் தொட்டிப் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை ஆகியவை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களாகும்.

கடந்த ஆண்டு குமரிக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், சுமார் 50,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கையாளக் கூடிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை. சுற்றுச்சூழலை மேம்படுத்துவதும் பாரம்பரியம் மற்றும் இயற்கை இடங்களைப் பாதுகாப்பதும் கட்டாயமாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தை மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத் தலமாக மாற்றுவதன் மூலம், இங்குள்ள மக்களும், சிறு வணிகர்களும் பயனடைவதோடு, வேலை வாய்ப்பும் பெருகும். இதை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை உலகின் சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும். மேலும், மத்திய அரசு ரூ.2000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். லோக்சபாவில் விதி 377-ன் கீழ் இந்த முக்கிய கோரிக்கையை அவர் முன்வைத்தார்.