புதுடெல்லி: நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக (சம்விதன் ஹத்யா திவாஸ்) அனுசரிக்கப்படும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் நெருக்கடியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: 1975 ஜூன் 25ல் அப்போதைய பிரதமர் இந்திரா, சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாக நாட்டில் எமர்ஜென்சியை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார்.
லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது. 35 ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் அவசரநிலையின் போது மனிதாபிமானமற்ற வலிகளை தாங்கிய மக்களின் பங்களிப்பை நினைவுகூரும்.
இவ்வாறு அமித் ஷா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான அரசாணையையும் அமித்ஷா பிறப்பித்துள்ளார்.