சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 14) வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.65,840க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.8,230க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.120 ஆகவும், 1 கிலோ ரூ.1,20,000 ஆகவும் விற்பனையாகிறது. கடைசியாக கடந்த 3ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.63,520-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுருக்கு