சென்னை: இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் உள்ள முக்கியமான திட்டங்கள் பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2020-21ல் .66 பில்லியன் என்பதிலிருந்து 2023-24ல் .56 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து பராமரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதேபோல் தமிழ்நாடு செமிகண்டக்டர் மிஷன்-2030 திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் கீழ், இரு பெற்றோரையும் இழந்து உறவினர் பராமரிப்பில் வாழும் சுமார் 50,000 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த குழந்தைகள் கல்வியை இடையில் நிறுத்தாமல் தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது அவர்கள் 18 வயது வரை பயன்பெற வழிவகுக்கும்