சென்னை: தமிழ்நாட்டில் முதியோர் நலனுக்காக, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளில் 25 அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும்.
இதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முதியோர்களுக்கு தினசரி பராமரிப்பு, மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் தொடர்பான திட்டம் 57 (TANSIM) இன் கீழ் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சீட் ஃபண்ட்-க்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு, கப்பல் தயாரிப்பு மற்றும் ship hull உற்பத்தியில் முதலீடு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும். விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.