இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. எதிர்வரும் 18-வது ஐபிஎல் சீசன் மார்ச் 21-ஆம் தேதி துவங்கி மே மாதம் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் 10 அணிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு, தங்களுக்கான வீரர்களை போட்டி போட்டு வாங்கி அணிகளை பலப்படுத்தினர். அந்த வகையில் பல்வேறு வீரர்களின் அணி மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், சில அணிகள் புதிய கேப்டன்களையும் நியமித்துள்ளன.
இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் நிகழப்போகிறது. கடந்த 3 ஆண்டுகளாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல், தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக இடம் மாறியுள்ளதால், லக்னோ அணியால் ரூபாய் 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட இருக்கிறார்.
ரிஷப் பண்ட் 2016-ஆம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார் மற்றும் 2021-ஆம் ஆண்டில் அந்த அணியின் கேப்டனாக பணியாற்றினார். கடந்த ஆண்டு விபத்து காரணமாக அவர் ஐபிஎல் தொடரை தவறவிட்டார். ஆனால் இந்த ஆண்டு, அவர் டெல்லி அணியிலிருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்துகொண்டு, லக்னோ அணியில் இணைந்தார்.
இதன் தொடர்ச்சியாக, தனது மதிப்பை சோதிக்க விரும்பிய ரிஷப் பண்ட், லக்னோ அணியால் ரூபாய் 27 கோடிக்கு வாங்கப்பட்டு, தற்போது கேப்டன் பதவியையும் பெற்றுள்ளார்.