ராம் சுகுமார் சென்னையைச் சேர்ந்த டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனமான இண்டியம் சாப்ட்வேர் தனது பெயரை இண்டியம் என மறுபெயரிடப் போவதாக அறிவித்துள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.1,300 கோடி வருவாய் ஈட்டவும் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராம் சுகுமார் கூறியதாவது:-
AI என்பது நிறுவனத்தின் முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கும், வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தின் பெயரை இண்டியம் சாப்ட்வேர் என மறுபெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் செயல்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ம் ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு நல்ல விகிதத்தில் ரூ.130 கோடியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வருவாயை 10 மடங்கு அதிகரித்து AI உதவியுடன் நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் கேமிங் உள்ளிட்ட துறைகளுக்கு சிறந்த டிஜிட்டல் பொறியியல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் 2025-25-க்குள் ரூ. 1,300 கோடி ரூபாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபிஓ மூலம் நிதி திரட்டும் திட்டம் எதுவும் நிறுவனத்திடம் இல்லை. இவ்வாறு ராம் சுகுமார் கூறினார்.