சென்னை: இன்றைய பட்ஜெட்டில் மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்படும் என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அதன்படி, முதியவர்களை பகல் நேரங்களில் பராமரித்துக் கொள்ளும் வசதியுடன் இந்த அன்புச் சோலைகள் இயங்கும் என்று தெரிய வந்துள்ளது.
ரூ.110 கோடியில் அமைக்கப்படும் அன்புச்சோலைகள் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையங்களாக செயல்படும். மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் மூத்த குடிமக்களுக்கு அன்புச் சோலை மையங்கள். மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு
40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும். இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டுத் திட்டம் பற்றிய அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.