சென்னை : டாஸ்மாக் நிர்வாகம் சிறப்பு கொள்முதல் முறையை ரத்து செய்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடோன்களில் இருப்பு நிலவரத்தை வைத்து மாவட்ட மேலாளர்களே மதுபான நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் சிறப்பு கொள்முதல் முறையை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
விற்பனையை அடிப்படையாக வைத்து இனி கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளது. போதிய வரவேற்பு இல்லாத போதும் சில மதுபான நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழல் பிரச்சனை தற்போது சட்டமன்றத்தில் பெரிய அளவில் வெடித்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக டாஸ்மாக் ஊழலை தெரிவித்து நேற்று வெளிநடப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.