வாஷிங்டன் : உக்ரைன் போரை நிறுத்த நல்ல வாய்ப்பு. இதை மிஸ் பண்ண கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரை நிறுத்த நல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாகவும், ரஷ்ய வீரர்களால் சூழப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேற்று புடினைச் சந்தித்து பேசிய நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அதிபர் ட்ரம்பை உக்ரைன் அதிபர் சந்தித்தபோது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து சில நாட்களில் போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அதிபர் அறிவித்திருந்தார். இந்நிலையில்தான் அதிபர் ட்ரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார். இதனால் உக்ரைன் போர் முடிவுக்கு வரவுள்ளது என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது.