கொல்கத்தா : வறுமையில் வாடும் முகலாயப் பேரரசரின் கொள்ளுப் பேத்திக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா, 1837இல் ஆங்கிலேயர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
பின்னர் 1857இல் சிப்பாய் புரட்சிக்கு காரணமென ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டு 1862இல் உயிரிழந்தார். அவரின் கொள்ளுப் பேத்தியான சுல்தானா பேகம், கொல்கத்தா அருகே குடிசை வீட்டில் வசிக்கிறார்.
அரண்மனையில் வாழ வேண்டிய அவர், தற்போது வறுமையில் வாடுகிறார். அவருக்கு அரசு உதவியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இனியாவது இவருக்கு அரசின் உதவிகள் கிடைக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.