கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குரூப்-1 பணியிடங்களில் (துணை ஆட்சியர், டிஎஸ்பி உட்பட) 90 காலியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 190 விண்ணப்பதாரர்களின் பட்டியலை தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.