சென்னை: புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கிட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
63,000 ஆயிரம் மலைவாழ் விவசாயிகள் பயன் பெரும் வகையில் 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும்.
மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு
காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப் பாசானப் பகுதிகளிலும் உள்ள ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களில் ரூ.13.80 கோடியில் தூர்வாரும் பணிகள் நடத்தப்படும்.
ரூ.17.37 கோடியில் இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவது வலுப்படுத்ப்படும்.
சிறு, குறு விவசாயிகளின் பயனுக்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் உருவாக்கப்படும்.
17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்துள்ள வெண்ணைப்பழ சாகுபடியை தென்காசி, திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஊக்குவிக்க ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ. 5 கோடியில், புதிய பலா ரகங்களை பரவலாக்கவும், பலாவில் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கப்படும்.
பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.