சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திருமங்கலம் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இந்த வாகன நிறுத்துமிடத்தை சென்னை மெட்ரோ ரயில் கழகத்தின் தலைமை ஆலோசகர் (செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு) திறந்து வைத்தார். பி.கோபி நாத் மல்லையா நேற்று திறந்து வைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தின் ஆலோசகர் (எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல்), எஸ்.கே. நடராஜன், கூடுதல் பொது மேலாளர் (மெட்ரோ ரயில் மற்றும் இயக்கம்) எஸ்.சதீஷ் பிரபு மற்றும் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது: திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலைய துணைக் கட்டடம் அருகே, தற்போதுள்ள பி-2 வாகன நிறுத்துமிடத்தில், வாகன நிறுத்துமிடமாக, கூடுதல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், கூடுதலாக 400 இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். இதன் மூலம் பி-2 வாகன நிறுத்துமிடத்தில் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் கிடைக்கும். இந்த புதிய விரிவாக்கம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குவதோடு, மெட்ரோ சேவையை எளிதாகவும் திறமையாகவும் பயன்படுத்த ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.