சென்னை : நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. இதுகுறித்து பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு புகழ்பெற்ற கலைஞன் பொதுவெளிக்கு வரும்போது பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்துள்ள அவர், தாம் தான் இந்த நாட்டுக்கே பாதுகாப்பு எனக் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.