சென்னை : அதிரி புதிரி வெற்றியை பெற்று வசூல் வேட்டையாடிய நடிகர் ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது.
ராஜேஷ் எம். முதல் படமாக இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ மாபெரும் வெற்றியை பெற்றது. அடுத்து இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப படமும் ரசிகர்களை திருப்தி செய்து மாபெரும் வெற்றியை பெற்றது
நயன்தாரா, ஆர்யாவுடன் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் எப்போது பார்த்தாலும் போரடிக்காத காமெடி கிளாஸிக் . ராஜேஷ் எம் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலக்கலான ரொமான்ஸ் காமெடி ஜானரில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெளியானபோதே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
யுவன் சங்கர் ராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யா திரை வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றித்திரைப்படமாக அமைந்தது.
படத்தின் வெற்றியில் நாயகியாக நடித்திருந்த நயன்தாராவுக்கு முக்கிய பங்குண்டு. தல தளபதி சலூன் கடை ஓனராக வந்த சந்தானத்தின் காமெடி வொர்க் அவுட்டானது. குறிப்பாக ஆர்யா – சந்தானம் காம்போவில் உருவான இப்படத்தின் காமெடி ட்ராக்குக்கு என தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது. படத்தின் மிகப்பெரும் தூணாக இந்த காமெடி ட்ராக் அமைந்தது.
இந்நிலையில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படம், வரும் 21ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.