சென்னை : புஷ்பா 3 படம் தொடர்பான அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவிசங்கர் வெளியிட்டுள்ளார். அதாவது, புஷ்பா 3 படத்திற்கான பணிகள் வருகிற 2028 ல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான படம் புஷ்பா தி ரூல். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரூ.400 கோடி வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் புஷ்பா தி ரைஸ் (புஷ்பா 2) வெளியானது. இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில், புஷ்பா 3 படம் தொடர்பான அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவிசங்கர் வெளியிட்டுள்ளார். அதாவது, புஷ்பா 3 படத்திற்கான பணிகள் வருகிற 2028 ல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நடிகர் அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்திலும், திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இந்த 2 படங்கள் முடிவடைய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே புஷ்பா 3 படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியுள்ளார்.