சமந்தா தனது முதல் படத்தின் வேலைகளை முடித்து ரிலீசுக்கு தயாராகி வருகிறார். சமந்தா ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் கீழ் ‘மா இண்டி பங்காரம்’ என்ற புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதில் சமந்தா மட்டுமே முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சமந்தா தனது புதிய படத்தின் தயாரிப்பை முடித்துள்ளார். ‘சுபம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘சினிமா பந்தி’ இயக்குனர்கள் வசந்த் மரிகண்டி மற்றும் பிரவீன் ஆகியோர் இயக்குகின்றனர்.
முழுக்க முழுக்க புதுமுக நடிகர்களைக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. கனகவல்லி டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் ‘சுபம்’ படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறையில் படம் வெளியாகும்.