சென்னை: நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வைஷ்ணவா மகளிர் கல்லூரி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”அரசு – பொதுமக்கள் – தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், ‘நமக்கு நாமே திட்டம்’ முக்கியப் பங்காற்றுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நுங்கம்பாக்கம், மாநகராட்சி மண்டலம்-9, 111-வது பிளாக்கில் உள்ள மாநகராட்சி பூங்கா ரூ.30 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. வைஷ்ணவா மகளிர் கல்லூரி. இந்த புதிய பூங்காவை இன்று திறந்து வைத்தோம். குழந்தைகள் விளையாடும் இடம் – உடற்பயிற்சி கூடம் – சிறிய அரங்கம் – நடைபாதை போன்ற வசதிகளுடன் கூடிய இந்த பூங்காவை பொதுமக்கள் அனைவரும் கண்டு மகிழ வாழ்த்துகிறோம்.
எம்ஓபி அவர்களுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். வைஷ்ணவா மகளிர் கல்லூரி இதற்குப் பங்களித்தது” என்றார்.