சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழகத்தின் சில பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. அதிகபட்ச வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு இடங்களில் சிறிது குறையலாம். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை நெருங்கக் கூடும். சென்னையை பொறுத்த வரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் இருக்கலாம். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.