சென்னை: ரஜினியின் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் ஷாகிர் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அமேசான் பிரைம் அதன் OTT உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகளை ஒரே கட்டமாக முடித்து ஆகஸ்ட் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக ‘கூலி’ படத்தின் பிரத்யேக பி.டி.எஸ் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் ஷாகிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.