மும்பை: பஞ்சாப் அணிக்காக கோப்பையை வெல்வது எனது ஒரே இலக்கு என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த போட்டியில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராஃபியை வெல்வதே தனது இலக்கு என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை.
அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும். சீசன் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.