புதுடெல்லி: 5ஜி-யை அறிமுகப்படுத்தியது… இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனத்தின் முக்கிய போட்டியாளா்களான ரிலையன்ஸ் ஜியோவும் பாா்தி ஏா்டெல்லும் ஏற்கெனவே 5ஜி சேவைகளை அளித்துவருகின்றன. இதன் காரணமாக அந்த நிறுவனங்கள் பெரும்பாலான தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்களைக் கைவசம் வைத்துள்ளன.
ஜியோவுக்கு 17 கோடி வாடிக்கையாளா்களும் ஏா்டெல்லுக்கு 12 கோடி வாடிக்கையாளா்களும் உள்ளனா். இந்த நிலையில், தனது சந்தைப் பங்கை அதிகரிக்கும் நோக்கில் 5ஜி சேவைகளை முதல்முதலாக மும்பையில் வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்னும் 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 17 தொலைத்தொடா்பு சரகங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.