மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்தியா மற்றும் உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கான், ஷாருக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், கியாரா, அத்வானி, சன்னி தியோல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்த ஜோடிக்கு WWF குத்துச்சண்டை வீரரும் நடிகருமான ஜான் செனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திருமணத்தை முன்னிட்டு அம்பானி குடும்பத்தினர் கடந்த ஜூன் 29ம் தேதி முதல் குஜராத்தி முறைப்படி திருமண சடங்குகளை செய்து வருகின்றனர்.திருமண நிகழ்வின் ஒரு பகுதியாக ஆனந்த் அம்பானி சார்பில் 50 பேருக்கு இலவசமாக திருமணம் நடந்தது.
இதுதவிர மும்பையில் தொடர்ந்து 40 நாட்களாக பார்ட்டி கொடுத்து வருகின்றனர். ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு ரூ.5,000 கோடி செலவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அம்பானியின் நிகர மதிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த செலவில் 10 ஆஸ்கர் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.