மேஷம்: உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள்.
ரிஷபம்: தடைகள், அலைச்சல்கள் வந்து நீங்கும். குடும்ப உறுப்பினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பழைய கடன்களை சண்டையிட்டு வசூலிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் யார் மீதும் பகைமை கொள்ளாதீர்கள்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பதவிகளை தேடி வருவீர்கள். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.
கடகம்: வீட்டில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். மூதாதையர் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை பெறுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். தொழில் வளம் பெறும்.

சிம்மம்: தாமதமான திருமணம் கைகூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக வீட்டைப் புதுப்பிக்க அதிகப் பணம் செலவழிப்பீர்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கன்னி: உங்கள் கனவுகள் நனவாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தம்பதியர் இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். வீண் அலைச்சல் குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உங்கள் தொழிலில் செழிப்பு இருக்கும்.
துலாம்: எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் மன முதிர்ச்சி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகப் பயணங்களால் புத்துணர்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் உங்கள் நற்பெயர் உயரும்.
விருச்சிகம்: உங்கள் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அலைச்சல் ஏற்படும். தம்பதிக்குள் மனம் திறந்து பேசி பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். வியாபாரம் வெற்றி பெறும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாகச் செயல்படுவது நல்லது.
தனுசு: கடினமான காரியங்களை பணிவாகப் பேசி சாதிப்பீர்கள். உங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். பொருட்கள் விற்கப்படும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மகரம்: சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களுடன் பழகுவீர்கள். தம்பதிக்குள் இருந்த பிரச்னைகள் தீரும். குடும்ப வருமானம் பெருக வழி உண்டாகும். வியாபாரம் செழிக்கும். தொழில் வெற்றிகரமாக அமையும்.
கும்பம்: பழைய நல்ல நினைவுகளால் நெகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களிடம் அன்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய கடன்களை சண்டையிட்டு வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் பெருகும். அலுவலகத்தில் யாருடனும் பகைமை கொள்ளாதீர்கள்.