ஆந்திர மாநிலம் அமராவதியில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், சபாநாயகர் அய்யண்ண பாத்ருடு நேற்று கூறியதாவது:- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பாலநாகி ரெட்டி, சந்திரசேகர், மச்சலிங்கம், விருபாக்ஷி, விஸ்வேஸ்வர ராஜு, அமர்நாத் ரெட்டி, தாசரி சுதா ஆகியோர் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆஜராவதற்கு முன்பு சட்டசபைக்கு வந்து இங்குள்ள பதிவேட்டில் ரகசியமாக கையெழுத்திட்டு விட்டு செல்கின்றனர்.

இது சரியல்ல. மக்கள் பிரச்னைகளை சட்டசபையில் பேச வேண்டும். தங்கள் தொகுதியின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். யாருக்கும் தெரியாமல் சட்டசபை பதிவேட்டில் கையெழுத்து போடுவது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.