ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஹோலி பண்டிகையை விடுமுறை நாளாக அறிவிக்க டெக்சாஸ் செனட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம், ஹோலியை அதிகாரப்பூர்வமாக கொண்டாடும் மாநிலங்களின் பட்டியலில் டெக்சாஸ் இணைந்துள்ளது.
முன்னதாக, நியூயார்க் மற்றும் ஜார்ஜியா மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டம் அங்கீகரிக்கப்பட்டு, அவற்றின் மாநில செனட் சபைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநிலங்களில், பண்டிகை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
இப்போது, டெக்சாஸில் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்திலும் ஹோலி விடுமுறை நாளாக அறிவிக்கப்படும். “ஹோலி என்பது டெக்சாஸ் மாநிலத்தின் கலாச்சார பன்முகத்தன்மையை ஒன்றிணைக்கும் பண்டிகை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அன்பையும் புத்துணர்ச்சியையும் விதைக்கும் பண்டிகை” என்று தீர்மானம் கூறுகிறது.
ஹூஸ்டனில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் மஞ்சுநாத் இந்த முடிவை வரவேற்றார்.